< Back
டென்னிஸ்
டென்னிஸ்
சீனா ஓபன் டென்னிஸ்; அரையிறுதிக்கு முன்னேறினார் கோகோ காப்
|4 Oct 2024 11:51 AM IST
நாளை நடைபெறும் அரையிறுதி ஆட்டத்தில் கோகோ காப், ஸ்பெயினின் பவுலா படோசா உடன் மோத உள்ளார்.
பீஜிங்,
சீனா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி பீஜிங் நகரில் நடந்து வருகிறது. இந்த தொடரில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற காலிறுதி ஆட்டம் ஒன்றில் முன்னணி வீராங்கனையான அமெரிக்காவின் கோகோ காப், உக்ரைனின் யூலியா ஸ்டாரோடுப்ட்சேவா உடன் மோதினார்.
இந்த ஆட்டத்தின் முதல் செட்டை 2-6 என்ற புள்ளிக்கணக்கில் இழந்த கோகோ காப் , ஆட்டத்தின் அடுத்த இரு செட்களை 6-2, 6-2 என்ற செட் கணக்கில் கைப்பற்றினார். இறுதியில் இந்த ஆட்டத்தில் 2-6, 6-2, 6-2 என்ற செட் கணக்கில் யூலியா ஸ்டாரோடுப்ட்சேவாவை வீழ்த்தி கோகோ காப் வெற்றி பெற்றார்.
இந்த வெற்றியின் மூலம் கோகோ காப் அரையிறுதிக்கு முன்னேறினார். நாளை நடைபெறும் அரையிறுதி ஆட்டத்தில் கோகோ காப், ஸ்பெயினின் பவுலா படோசா உடன் மோத உள்ளார்.