< Back
டென்னிஸ்
டென்னிஸ்
பிரிஸ்பேன் டென்னிஸ்: ஜிரி லெஹெக்கா அரையிறுதிக்கு முன்னேற்றம்
|4 Jan 2025 6:33 AM IST
ஜிரி லெஹெக்கா அரையிறுதியில் டிமிட்ரோவ் உடன் பலப்பரீட்சை நடத்த உள்ளார்.
பிரிஸ்பேன்,
பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற ஆண்கள் ஒறையர் பிரிவின் காலிறுதி ஆட்டம் ஒன்றில் முன்னணி வீரரான ஜிரி லெஹெக்கா (செக்குடியரசு), நொக்கோலஸ் ஜாரியுடன் (சிலி) மோதினார்.
இதில் முழுமையாக ஆதிக்கம் செலுத்திய லெஹெக்கா 6-4 மற்றும் 6-4 என்ற நேர் செட் கணக்கில் ஜாரியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். இவர் அரையிறுதியில் டிமிட்ரோவ் உடன் பலப்பரீட்சை நடத்த உள்ளார்.