< Back
டென்னிஸ்
பிரிஸ்பேன் டென்னிஸ்; முதல் வீராங்கனையாக குடெர்மிடோவா இறுதிப்போட்டிக்கு தகுதி
டென்னிஸ்

பிரிஸ்பேன் டென்னிஸ்; முதல் வீராங்கனையாக குடெர்மிடோவா இறுதிப்போட்டிக்கு தகுதி

தினத்தந்தி
|
4 Jan 2025 11:19 AM IST

குடெர்மிடோவா அரையிறுதியில் கலினினா உடன் மோதினார்.

பிரிஸ்பேன்,

பல முன்னணி வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றுள்ள பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி ஆட்டம் ஒன்றில் ரஷிய வீராங்கனை குடெர்மிடோவா, உக்ரைனின் கலினினாவை எதிர்கொண்டார்.

இதில் ஆரம்பம் முதலே ஆக்ரோஷமாக விளையாடிய குடெர்மிடோவா 6-4 மற்றும் 6-3 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று முதல் வீராங்கனையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

இவர் இறுதிப்போட்டியில் சபலென்கா அல்லது ஆண்ட்ரீவா உடன் மோதுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்