< Back
டென்னிஸ்
டென்னிஸ்
பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ்: ஜோகோவிச் ஜோடி தோல்வி
|1 Jan 2025 9:40 PM IST
இதனால் ஜோகோவிச் ஜோடி தொடரிலிருந்து வெளியேறியது.
பிரிஸ்பேன்,
பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் இரட்டையரில் 2வது சுற்று ஆட்டத்தில் செர்பியாவின் ஜோகோவிச் - ஆஸ்திரேலியாவின் நிக் கிரியாசு ஜோடி , குரேஷிய வீரர் நிகோலா மெக்டிக் - நியூசிலாந்தின் மைக்கேல் வீனஸ் ஜோடியுடன் மோதியது .
பரபரப்பான இந்த ஆட்டத்தில் 2-6 ,6-3 , 8-10 என்ற செட் கணக்கில் ஜோகோவிச் ஜோடி தோல்விடைந்தது . இதனால் ஜோகோவிச் ஜோடி தொடரிலிருந்து வெளியேறியது.