< Back
டென்னிஸ்
பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ்: 2வது சுற்றுக்கு முன்னேறினார் ஜோகோவிச்

Image Courtesy: AFP

டென்னிஸ்

பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ்: 2வது சுற்றுக்கு முன்னேறினார் ஜோகோவிச்

தினத்தந்தி
|
31 Dec 2024 5:16 PM IST

செர்பியாவின் நோவக் ஜோகோவிச், ஆஸ்திரேலியாவின் ரிங்கி ஹிஜிகாடா உடன் மோதினார்.

பிரிஸ்பேன்,

பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த தொடரில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் செர்பியாவின் நோவக் ஜோகோவிச், ஆஸ்திரேலியாவின் ரிங்கி ஹிஜிகாடா உடன் மோதினார்.

இந்த போட்டியில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஜோகோவிச் 6-3, 6-3 என்ற நேர் செட் கணக்கில் ஆஸ்திரேலியாவின் ரிங்கி ஹிஜிகாடாவை வீழ்த்தி 2வது சுற்றுக்கு முன்னேறினார். ஜோகோவிச் 2வது சுற்றில் வரும் 2ம் தேதி பிரான்சின் கெயில் மான்பில்ஸ் உடன் மோத உள்ளார்.

மேலும் செய்திகள்