< Back
டென்னிஸ்
டென்னிஸ்
பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ்; சாம்பியன் பட்டம் வென்றார் அரினா சபலென்கா
|5 Jan 2025 4:17 PM IST
பெலாரசின் அரினா சபலென்கா, ரஷியாவின் போலினா குடெர்மெடோவா உடன் மோதினார்.
பிரிஸ்பேன்,
பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் பெலாரசின் அரினா சபலென்கா, ரஷியாவின் போலினா குடெர்மெடோவா உடன் மோதினார். இந்த ஆட்டத்தின் முதல் செட்டை 4-6 என்ற புள்ளிக்கணக்கில் சபலென்கா இழந்தார்.
இதையடுத்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய சபலென்கா அடுத்த இரு செட்களை 6-3, 6-2 என்ற புள்ளிக்கணக்கில் கைப்பற்றினார். இதன் மூலம் 4-6, 6-3, 6-2 என்ற செட் கணக்கில் போலினா குடெர்மெடோவாவை வீழ்த்தி சபலென்கா சாம்பியன் பட்டம் வென்றார்.