< Back
டென்னிஸ்
டென்னிஸ்
பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ்: அரினா சபலென்கா, ஆஷ்லின் க்ரூகர் அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்
|31 Dec 2024 3:01 PM IST
ரஷியாவின் அன்னா கலின்ஸ்காயா, அமெரிக்காவின் ஆஷ்லின் க்ரூகர் உடன் மோதினார்.
பிரிஸ்பேன்,
பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த தொடரில் இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்று ஆட்டம் ஒன்றில் ரஷியாவின் அன்னா கலின்ஸ்காயா, அமெரிக்காவின் ஆஷ்லின் க்ரூகர் உடன் மோதினார்.
இந்த போட்டியில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஆஷ்லின் க்ரூகர் 6-3, 6-3 என்ற நேர் செட் கணக்கில் அன்னா கலின்ஸ்காயாவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். இதே பிரிவில் இன்று நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் பெலாரஸின் அரினா சபலென்கா, மெக்சிகோவின் ரெனாட்டா ஜராசுவா உடன் மோதினார்.
இந்த ஆட்டத்தில் அனுபவ வீராங்கனையான அரினா சபலென்கா 6-4, 6-0 என்ற செட் கணக்கில் ரெனாட்டா ஜராசுவாவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.