< Back
டென்னிஸ்
டென்னிஸ்
பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ்: அரினா சபலென்கா அரையிறுதிக்கு முன்னேற்றம்
|3 Jan 2025 6:32 PM IST
பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது.
பிரிஸ்பேன்,
முன்னணி வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றுள்ள பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டம் ஒன்றில் முன்னணி வீராங்கனையான அரினா சபலென்கா (பெலாரஸ்), செக் குடியரசின் மேரி பௌஸ்கோவா உடன் மோதினார்.
இந்த போட்டியில் தொடக்கம் முதலே அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய அரினா சபலென்கா 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்கில் மேரி பௌஸ்கோவாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார். நாளை நடைபெறும் அரையிறுதி ஆட்டத்தில் சபலென்கா ரஷியாவின் மிர்ரா ஆண்ட்ரீவா உடன் மோத உள்ளார்.