< Back
டென்னிஸ்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் 2025: இந்திய வீரர் சுமித் நாகல் நேரடி தகுதி

image courtesy: AFP

டென்னிஸ்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் 2025: இந்திய வீரர் சுமித் நாகல் நேரடி தகுதி

தினத்தந்தி
|
7 Dec 2024 9:32 AM IST

சுமித் நாகல் இந்த தொடரில் பங்கேற்பது இது 5-வது முறையாகும்.

புதுடெல்லி,

ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் அடுத்த ஆண்டு (2025) ஜனவரி 12-ந்தேதி முதல் 26-ந் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்த தொடருக்கு நேரடியாக தகுதி பெற்றுள்ள வீரர்களின் பட்டியலை ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் கூட்டமைப்பு நேற்று வெளியிட்டது. இதில் ஆண்கள் தரவரிசையில் 98-வது இடத்தில் உள்ள இந்திய வீரர் சுமித் நாகல் நேரடியாக தகுதிபெற்றுள்ளார்.

இவர் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் பங்கேற்பது இது 5-வது முறையாகும்.

மேலும் செய்திகள்