< Back
டென்னிஸ்
டென்னிஸ்
அடிலெய்டு டென்னிஸ்: பெண்கள் ஒற்றையர் பிரிவில் மேடிசன் கீஸ் சாம்பியன்
|11 Jan 2025 2:37 PM IST
இவர் இறுதிப்போட்டியில் ஜெசிகா பெகுலாவுடன் பலப்பரீட்சை நடத்தினார்.
அடிலெய்டு,
அடிலெய்டு சர்வதேச டென்னிஸ் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் முன்னணி வீராங்கனையான அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா, சக நாட்டவரான மேடிசன் கீஸ் உடன் மோதினார்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதல் 2 செட்டுகளை ஆளுக்கு ஒன்றாக கைப்பற்றினர். இதனால் 3-வது செட் பரபரப்புக்குள்ளானது. இறுதியில் 3-வது செட்டை கீஸ் கைப்பற்றி பரபரப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
கீஸ் இந்த ஆட்டத்தில் 6-3, 4-6 மற்றும் 6-1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.