டென்னிஸ்
அடிலெய்டு டென்னிஸ்: பெண்கள் ஒற்றையர் பிரிவில் ஜெசிகா பெகுலா இறுதிப்போட்டிக்கு தகுதி
டென்னிஸ்

அடிலெய்டு டென்னிஸ்: பெண்கள் ஒற்றையர் பிரிவில் ஜெசிகா பெகுலா இறுதிப்போட்டிக்கு தகுதி

தினத்தந்தி
|
10 Jan 2025 8:00 PM IST

இந்த தொடரின் இறுதிப்போட்டியில் பெகுலா - கீஸ் பலப்பரீட்சை நடத்த உள்ளனர்.

அடிலெய்டு,

அடிலெய்டு சர்வதேச டென்னிஸ் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இறுதி கட்டத்தை எட்டியுள்ள இந்த தொடரில் இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2-வது அரையிறுதி ஆட்டத்தில் முன்னணி வீராங்கனையான ஜெசிகா பெகுலா (அமெரிக்கா), புதின்சேவா (கஜகஸ்தான்) உடன் மோதினார்.

இந்த ஆட்டத்தில் முதல் செட் பரபரப்பாக நகர்ந்தது. இறுதியில் அதனை டை பிரேக்கர் வரை போராடி பெகுலா கைப்பற்றினார். இதனையடுத்து 2-வது செட்டை பெகுலா எளிதில் கைப்பற்றி வெற்றி பெற்றார். முடிவில் 7-6 மற்றும் 6-3 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்ற பெகுலா இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று அசத்தியுள்ளார்.

இவர் நாளை நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் மேடிசன் கீஸ் உடன் பலப்பரீட்சை நடத்த உள்ளார்.

மேலும் செய்திகள்