உலக செஸ் சாம்பியன்ஷிப்; 11வது சுற்றில் லிரெனை வீழ்த்தி வெற்றி பெற்றார் குகேஷ்
|உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடந்து வருகிறது.
சிங்கப்பூர்,
இந்திய கிராண்ட்மாஸ்டர் குகேஷ், நடப்பு சாம்பியன் சீனாவின் டிங் லிரென் இடையிலான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடந்து வருகிறது. 14 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில் நடந்து முடிந்த 10 சுற்றுகள் முடிவில் இருவரும் தலா 5 புள்ளிகளுடன் சமநிலையில் இருந்தனர்.
இந்த நிலையில் இன்று 11-வது சுற்று ஆட்டம் நடைபெற்றது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் அபாரமாக செயல்பட்ட குகேஷ் டிங் லிரெனை வீழ்த்தி வெற்றி பெற்றார். இந்த வெற்றியின் மூலம் கூடுதலாக ஒரு புள்ளி பெற்று 6 புள்ளிகளுடன் முன்னிலையில் உள்ளார்.
11 சுற்று ஆட்டங்களின் முடிவில் குகேஷ் 6 புள்ளிகளுடனும், லிரென் 5 புள்ளிகளுடனும் உள்ளனர். இன்னும் 3 சுற்று ஆட்டங்கள் மீதம் உள்ளன. முதலில் எந்த வீரர் 7.5 புள்ளிகளை எட்டுகிறாரோ அவர், சாம்பியன் பட்டத்தை கைப்பற்றுவார்.
லிரென் சாம்பியன் பட்டத்தை தக்கவைக்க இன்னும் 2.5 புள்ளிகள் தேவைப்படுகிறது. அதேவேளையில் முதன்முறையாக பட்டம் வெல்வதற்கு குகேஷுக்கும் மேற்கொண்டு 1.5 புள்ளிகள் தேவைப்படுகிறது.