< Back
பிற விளையாட்டு
உலக செஸ் சாம்பியன்ஷிப்: குகேஷ் - லிரென் மோதிய 4-வது சுற்று ஆட்டம் டிரா

image courtesy: International Chess Federation twitter

பிற விளையாட்டு

உலக செஸ் சாம்பியன்ஷிப்: குகேஷ் - லிரென் மோதிய 4-வது சுற்று ஆட்டம் 'டிரா'

தினத்தந்தி
|
30 Nov 2024 7:15 AM IST

4 சுற்று முடிவில் இருவரும் தலா 2 புள்ளியுடன் சமநிலையில் உள்ளனர்.

சிங்கப்பூர்,

இந்திய கிராண்ட்மாஸ்டர் குகேஷ், நடப்பு சாம்பியன் சீனாவின் டிங் லிரென் இடையிலான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடந்து வருகிறது. 14 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில் முதல் சுற்றில் லிரெனும், 3-வது சுற்றில் குகேசும் வெற்றி பெற்றனர். 2-வது சுற்று 'டிரா' ஆனது.

இந்த நிலையில் நேற்று 4-வது சுற்று நடந்தது. கருப்புநிற காய்களுடன் ஆடிய குகேஷ் முதல் நகர்வாக ராணி முன் உள்ள சிப்பாயை 2 கட்டம் எடுத்து வைத்தார். முந்தைய ரவுண்டில் நீண்ட நேரம் யோசித்து நேரத்தை இழந்ததால் தோல்வியை தழுவிய லிரென் இந்த முறை விழிப்போடு செயல்பட்டார்.

இருவரும் பரஸ்பரமாக காய்களை வெட்டுக் கொடுத்ததால் ஆட்டம் 'டிரா'வை நோக்கியே சென்றது. இறுதியில் 42-வது நகர்த்தலில் 'டிரா' செய்ய ஒப்புக் கொண்டனர். அப்போது இருவரிடமும் ஒரே மாதிரி 5 காய்கள் எஞ்சியிருந்தன.

4 சுற்று முடிவில் இருவரும் தலா 2 புள்ளியுடன் சமநிலையில் உள்ளனர். இன்று பிற்பகல் 2.30 மணிக்கு நடக்கும் 5-வது சுற்றில் தமிழகத்தை சேர்ந்த குகேஷ் வெள்ளைநிற காய்களுடன் ஆடுகிறார்.

மேலும் செய்திகள்