< Back
பிற விளையாட்டு
உலக செஸ் சாம்பியன்ஷிப்: மீண்டும் முன்னிலை பெறுவாரா குகேஷ்? - 13-வது சுற்று இன்று நடக்கிறது

கோப்புப்படம் 

பிற விளையாட்டு

உலக செஸ் சாம்பியன்ஷிப்: மீண்டும் முன்னிலை பெறுவாரா குகேஷ்? - 13-வது சுற்று இன்று நடக்கிறது

தினத்தந்தி
|
11 Dec 2024 8:05 AM IST

12 சுற்றுகள் முடிவில் இருவரும் தலா 6 புள்ளிகளுடன் சமநிலையில் உள்ளனர்.

சிங்கப்பூர்,

தமிழகத்தைச் சேர்ந்த குகேஷ், நடப்பு சாம்பியன் சீனாவின் டிங் லிரென் இடையிலான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடந்து வருகிறது. 14 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில் இதுவரை 12 சுற்றுகள் முடிந்துள்ளது. இருவரும் தலா 6 புள்ளிகளுடன் சமநிலையில் உள்ளனர். இதில் 3-வது மற்றும் 11-வது சுற்றில் குகேசும், முதலாவது மற்றும் 12-வது சுற்றில் லிரெனும் வெற்றி பெற்றனர். மற்ற ஆட்டங்கள் 'டிரா'வில் முடிந்தது.

இந்த நிலையில் ஒரு நாள் ஓய்வுக்கு பிறகு இன்று 13-வது சுற்று பிற்பகல் 2.30 மணிக்கு நடைபெறுகிறது. இதில் குகேஷ் வெள்ளைநிற காய்களுடன் விளையாடுகிறார். முந்தைய சுற்றில் தாக்குதல் பாணியை கையாண்ட லிரென் 39-வது நகர்த்தலில் வெற்றியை வசப்படுத்தினார். இதனால் இந்த தடவை புதிய வியூகங்களுடன் குகேஷ் களம் காணுவார். குகேஷ் தனது இரு வெற்றியையும் வெள்ளை நிற காய்களுடன் ஆடும் போது தான் பெற்றார். எனவே இன்று அவர் வெள்ளை நிற காய்களுடன் ஆடுவது சாதகமான அம்சமாக பார்க்கப்படுகிறது.

முக்கியமான இன்றைய ஆட்டத்தில் வெற்றி காணும் வீரருக்கு கோப்பையை வெல்வதற்கான வாய்ப்பு பிரகாசமாகும். ஒரு வேளை எஞ்சிய இரு சுற்றும் டிராவில் முடிந்தால் வெற்றியாளரை தீர்மானிக்க டைபிரேக்கர் கடைபிடிக்கப்படும்.

மேலும் செய்திகள்