< Back
பிற விளையாட்டு
சர்வதேச பேட்மிண்டன்: முதல் சுற்றில் சிந்து, லக்சயா சென் வெற்றி

கோப்புப்படம்

பிற விளையாட்டு

சர்வதேச பேட்மிண்டன்: முதல் சுற்றில் சிந்து, லக்சயா சென் வெற்றி

தினத்தந்தி
|
28 Nov 2024 9:42 AM IST

முதல் சுற்று ஆட்டத்தில் இந்திய வீரர் லக்‌சயா சென், மலேசியாவின் ஷோலே அய்டிலுடன் மோதினார்.

லக்னோ,

சையத் மோடி நினைவு சர்வதேச பேட்மிண்டன் போட்டி உத்தரபிரதேச தலைநகர் லக்னோவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் லக்சயா சென், மலேசியாவின் ஷோலே அய்டிலுடன் மோதினார். இந்த ஆட்டத்தில் லக்சயா சென் 21-12, 21-12 என்ற நேர்செட்டில் ஷோலே அய்டிலை தோற்கடித்து 2-வது சுற்றுக்கு முன்னேறினார். அடுத்த ஆட்டத்தில் லக்சயா சென், இஸ்ரேலின் டேனில் துபோவென்கோவை சந்திக்கிறார்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற முதல் சுற்றில் ஒலிம்பிக்கில் 2 பதக்கம் வென்ற இந்திய நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து, சக நாட்டு வீராங்கனையான அன்மோல் கார்ப்புடன் மோதினார். இந்த ஆட்டத்தில் பி.வி.சிந்து 21-17, 21-15 என்ற நேர்செட்டில் அன்மோல் கார்ப்பை விரட்டியடித்து 2-வது சுற்றுக்கு முன்னேறினார். அடுத்த ஆட்டத்தில் சிந்து, சக நாட்டு வீராங்கனை இரா ஷர்மாவை எதிர்கொள்கிறார்.

மேலும் செய்திகள்