< Back
பிற விளையாட்டு
மேட்ச் பிக்சிங்: பிரபல ஸ்னூக்கர் விளையாட்டு வீரருக்கு 5 ஆண்டுகள் தடை
பிற விளையாட்டு

மேட்ச் பிக்சிங்: பிரபல ஸ்னூக்கர் விளையாட்டு வீரருக்கு 5 ஆண்டுகள் தடை

தினத்தந்தி
|
15 Nov 2024 6:58 PM IST

மேட்ச் பிக்சிங் வழக்கில் பிரபல ஸ்னூக்கர் விளையாட்டு வீரருக்கு 5 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

லண்டன்,

ஸ்னூக்கர் (Snooker) என்னும் மேடைக் கோற்பந்தாட்டம் இங்கிலாந்து, சீனா, ஜெர்மனி உள்பட பல்வேறு நாடுகளில் பிரபலமான விளையாட்டு ஆகும்.

இதனிடையே, இங்கிலாந்தை சேர்ந்த பிரபல ஸ்னூக்கர் விளையாட்டு வீரர் மார்க் கிங் (வயது 50). இவர் சர்வதேச ஸ்னூக்கர் தரவரிசையில் கடந்த 2003ம் ஆண்டு 11வது இடத்தில் இருந்தார்.

கடந்த ஆண்டு பிப்ரவரி 13ம் தேதி மற்றொரு இங்கிலாந்து வீரர் ஜோ பெரிக்கு எதிரான ஆட்டத்தின்போது மார்க் கிங் மேட்ச் பிக்சிங்கிள் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இது தொடர்பாக சர்வதேச ஸ்னூக்கர் விளையாட்டு அமைப்பு விசாரணை மேற்கொண்டு வந்தது. விசாரணையில் மார்க் கிங் மேட்ச் பிக்சிங் எனப்படும் சூதாட்டத்தில் ஈடுபட்டது உறுதியானது.

இந்நிலையில், மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்ட மார்க் கிங் 5 ஆண்டுகள் ஸ்னூக்கர் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், அவருக்கு 68 ஆயிரம் பவுண்டுகள் (இந்திய மதிப்பில் சுமார் 73 லட்ச ரூபாய்) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மார்கி கிங்கிற்க்கு விதிக்கப்பட்ட தடை 17 மார்ச் 2028ம் தேதி நிறைவடைய உள்ளது.

மேலும் செய்திகள்