களத்தில் கண் கலங்கிய ரொனால்டோ... ஜாலியாக ரீல்சில் மூழ்கிய காதலி; நெட்டிசன்கள் விமர்சனம்
|2019 சீசனின்போது, அல்-நாசர் அணி முன்னாள் நட்சத்திர வீரர் அப்துர் ரஜாக் 34 கோல்கள் அடித்து, படைத்திருந்த சாதனையை ரொனால்டோ முறியடித்து இருக்கிறார்.
சவுதி அரேபியா,
சவுதி அரேபியாவில் கிங்ஸ் கோப்பைக்கான கால்பந்து இறுதி போட்டி ஜெட்டா நகரில் நடந்தது. இதில், அல்-நாசர் மற்றும் அல்-ஹிலால் அணிகள் மோதின.
போட்டியில் அல்-நாசர் அணி சார்பில் கிறிஸ்டியானோ ரொனால்டோ (வயது 39) அதிரடியாக விளையாடினார். எனினும், பெனால்டி ஷூட் வரை சென்று, கடுமையாக போராடியும் அவருடைய அணி போட்டியில் தோல்வியை தழுவியது. இதனால், களத்திலேயே சக வீரர்கள் முன்னிலையில் ரொனால்டோ கண் கலங்கினார்.
போட்டி முடிந்து கேலரிக்கு திரும்பிய பின்னரும் அவர் அழுதபடியே காணப்பட்டார். ஒரு சீசனில் 35 கோல்கள் என்ற கணக்கில் ரொனால்டோ இந்த முறை சாதனை படைத்திருக்கிறார்.
2019 சீசனின்போது, அல்-நாசர் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் அப்துர் ரஜாக் ஹம்துல்லா 34 கோல்கள் அடித்து சாதனை படைத்திருந்த நிலையில், ரொனால்டோ அதனை முறியடித்து இருக்கிறார்.
இந்த தோல்வியால் கோப்பையை இழந்தபோதும், அணியிலேயே ரொனால்டோ நீடிப்பார் என அல்-நாசர் அணி தலைவர் கீடோ பீங்கா உறுதிப்படுத்தி உள்ளார்.
இந்த பரபரப்புக்கு இடையே, ரொனால்டோவின் 8 ஆண்டு காதலியான ஜார்ஜினா ரோட்ரிகீஸ் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் சில பதிவுகளை வெளியிட்டார். ரொனால்டோவுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் பதிவுகளை வெளியிட்டபோதும், அதில் அவருடைய அழகை முன்னிலைப்படுத்துவது போன்ற புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தன. இதனால், ரொனால்டோவின் ரசிகர்கள் அவரை கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர்.