< Back
பிற விளையாட்டு
பிற விளையாட்டு
புரோ கபடி லீக்: புனேரி பால்டன் அணியை வீழ்த்தி தெலுங்கு டைட்டன்ஸ் வெற்றி
|20 Dec 2024 10:17 PM IST
இன்று நடைபெற்ற ஆட்டத்தில் புனேரி பால்டன் - தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதின.
புனே,
12 அணிகள் இடையிலான 11-வது புரோ கபடி லீக் போட்டி கடந்த அக்டோபர் 18-ம் தேதி ஐதராபாத்தில் தொடங்கியது. இந்த தொடரின் முதற்கட்ட லீக் ஆட்டங்கள் ஐதராபாத்திலும், 2-வது கட்ட லீக் ஆட்டங்கள் நொய்டாவிலும் நடைபெற்று முடிந்தன. இந்த தொடரின் 3-வது கட்ட லீக் ஆட்டங்கள் தற்போது புனேவில் நடைபெற்று வருகிறது.
இந்த தொடரில் இன்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் - பெங்கால் வாரியர்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் ஜெய்ப்பூர் அணி 31-28 என்ற புள்ளி கணக்கில் பெங்கால் வாரியர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
தொடர்ந்து நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் புனேரி பால்டன் - தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ் அணி 48-36 என்ற புள்ளி கணக்கில் புனேரி பால்டன் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.