< Back
பிற விளையாட்டு
புரோ கபடி லீக்; பெங்களூரு அணியை வீழ்த்தி பாட்னா வெற்றி
பிற விளையாட்டு

புரோ கபடி லீக்; பெங்களூரு அணியை வீழ்த்தி பாட்னா வெற்றி

தினத்தந்தி
|
30 Nov 2024 9:44 PM IST

தொடரின் 2-வது கட்ட லீக் ஆட்டங்கள் நொய்டாவில் நடைபெற்று வருகின்றன.

நொய்டா,

11-வது புரோ கபடி லீக் தொடர் கடந்த அக்டோபர் 18-ம் தேதி ஐதராபாத்தில் தொடங்கியது. இந்த தொடரின் முதற்கட்ட லீக் ஆட்டங்கள் ஐதராபாத்தில் நடந்து முடிந்தன. இதையடுத்து தொடரின் 2-வது கட்ட லீக் ஆட்டங்கள் நொய்டாவில் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், இந்த தொடரில் இன்று இரவு 8 மணிக்கு நடைபெற்ற ஆட்டத்தில் பாட்னா பைரேட்ஸ் - பெங்களூரு புல்ஸ் அணிகள் மோதின .

இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதல் பாட்னா பைரேட்ஸ்சிறப்பாக விளையாடியது . இதனால் பாட்னா பைரேட்ஸ் 54-29 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்றது.

மேலும் செய்திகள்