< Back
பிற விளையாட்டு
புரோ கபடி லீக்: பெங்கால் வாரியர்ஸ்- ஜெய்ப்பூர் அணிகள் இன்று மோதல்

கோப்புப்படம் 

பிற விளையாட்டு

புரோ கபடி லீக்: பெங்கால் வாரியர்ஸ்- ஜெய்ப்பூர் அணிகள் இன்று மோதல்

தினத்தந்தி
|
20 Oct 2024 6:25 AM IST

புரோ கபடி லீக் போட்டி கடந்த 18ம் தேதி தொடங்கியது.

ஐதராபாத்,

11-வது புரோ கபடி லீக் போட்டி ஐதராபாத்தில் கடந்த 18ம் தேதி தொடங்கியது. இதில் பங்கேற்றுள்ள 12 அணிகள் தங்களுக்குள் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 6 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளே-ஆப்' சுற்றுக்கு தகுதி பெறும்.லீக்கில் 'டாப்-2' இடங்களை வசப்படுத்தும் அணிகள் நேரடியாக அரையிறுதிக்குள் அடியெடுத்து வைக்கும். 3 முதல் 6 இடங்களை பெறும் அணிகள் வெளியேற்றுதல் சுற்றில் மோதி அதில் வெற்றி பெறும் 2 அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.

இந்த நிலையில் , இந்த தொடரில் இன்றைய ஆட்டங்களில் பெங்கால் வாரியர்ஸ்- ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் (இரவு 8 மணி), குஜராத் ஜெயன்ட்ஸ்- பெங்களூரு புல்ஸ் (இரவு 9 மணி) அணிகள் மோதுகின்றன.

மேலும் செய்திகள்