பாரீஸ் ஒலிம்பிக்; பதக்கம் வெல்லுமா ? சாத்விக் சாய்ராஜ் - சிராக் ஷெட்டி இணை
|33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்சின் பாரீஸ் நகரில் வருகிற 26-ந்தேதி கோலாகலமாக தொடங்குகிறது.
மும்பை,
33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் வரும் 26-ந்தேதி கோலாகலமாக தொடங்குகிறது. இந்த போட்டிக்கு இந்தியா சார்பில் இதுவரை 124 பேர் தகுதி பெற்றுள்ளனர். இந்த தொடருக்கு இன்னும் 16 நாட்கள் மட்டுமே உள்ளதால் இதன் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு தற்போதே அதிகரித்துள்ளது.
இந்நிலையில் இந்த ஒலிம்பிக் தொடரில் பேட்மிண்டனில் ஆண்கள் இரட்ரையர் பிரிவில் களம் காணும் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி இணை பதக்கம் வெல்லுமா என ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு நிலவுகிறது.
சிங்கப்பூர் ஓபன் போட்டியில் சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி இணை முதல் சுற்றில் தோல்வியடைந்த பிறகு வேறு தொடர்களில் பங்கேற்கவில்லை. கடந்த ஒலிம்பிக் போட்டியில் குரூப் போட்டிகள் மூன்றில் 2-ல் வெற்றி பெற்று காலிறுதி வாய்ப்பை நூலிழையில் தவறவிட்டனர்.
ஆனால், இந்த முறை பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகளுக்காக கடினமாகத் தயாராகியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் அவர்கள் பதக்கம் வெல்ல அதிகம் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.