< Back
ஒலிம்பிக் 2024
பாரீஸ் ஒலிம்பிக் பேட்மிண்டன்: சிபிரிவில் சாத்விக் - சிராக்

image courtesy:AFP

ஒலிம்பிக் 2024

பாரீஸ் ஒலிம்பிக் பேட்மிண்டன்: 'சி'பிரிவில் சாத்விக் - சிராக்

தினத்தந்தி
|
16 July 2024 12:46 AM GMT

33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் வருகிற 26-ம் தேதி தொடங்குகிறது.

புதுடெல்லி,

33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் வருகிற 26-ம் தேதி தொடங்குகிறது. இதில் பேட்மிண்டன் போட்டியில் ஆண்கள் இரட்டையர் பிரிவினருக்கான அட்டவணை நேற்று வெளியிடப்பட்டது. இந்த பிரிவில் பங்கேற்கும் 17 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.

இதன்படி முன்னாள் நம்பர் 1 இணையான இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி-சிராக் ஷெட்டி கூட்டணி எளிதான 'சி' பிரிவில் இடம் பிடித்துள்ளது. அந்த பிரிவில் உலக தரவரிசையில் 6-வது இடத்தில் உள்ள பாஜர் அல்பியான்-முகமது ரியான் அட்ரியான்டோ (இந்தோனேசியா), 31-வது இடத்தில் இருக்கும் மார்க் லாம்பஸ்-மார்வின் சிடெல் (ஜெர்மனி), 43-வது இடத்தில் உள்ள லூகாஸ் கார்வீ-ரோனன் லாபர் (பிரான்ஸ்) ஜோடியும் இடம்பெற்றுள்ளன.

லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் ஜோடிகள் காலிறுதிக்கு தகுதி பெறும்.

மேலும் செய்திகள்