< Back
பிற விளையாட்டு
பாராஒலிம்பிக்: ஒரு புள்ளியில் உலக சாதனையை தவறவிட்ட  ஷீத்தல் தேவி

image courtesy: AFP

பிற விளையாட்டு

பாராஒலிம்பிக்: ஒரு புள்ளியில் உலக சாதனையை தவறவிட்ட ஷீத்தல் தேவி

தினத்தந்தி
|
30 Aug 2024 12:41 PM IST

பாராஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது.

பாரீஸ்,

மாற்றுத்திறனாளிகளுக்கான 17-வது பாராஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இதில் உலகம் முழுவதில் இருந்து 4,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

இதில் நேற்று நடைபெற்ற வில்வித்தை போட்டியில் பெண்களுக்கான காம்பவுண்ட் தனிநபர் ரேங்கிங் தகுதி சுற்றில் களம் புகுந்த, 17- வயதான இந்திய வீராங்கனை ஷீத்தல் தேவி இரு கைகள் இல்லாத நிலையில் கால்களால் அம்புகளை எய்து அசத்தினார்.

இதில் சிறப்பாக செயல்பட்ட ஷீத்தல் தேவி, ஒரு புள்ளியில் உலக சாதனையை தவறவிட்டுள்ளார். ஷீத்தல் தேதி, 703 புள்ளிகளை எடுத்து முந்தைய உலக சாதனையான 698 புள்ளிகளை முறியடித்த நிலையில், துருக்கி வீராங்கனை ஒஸ்னூர் க்யூர் 704 புள்ளிகளை எடுத்து ஷீத்தலை பின்னுக்குத் தள்ளினார். இதில் 2-வது இடம் பிடித்த ஷீத்தல் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

இருப்பினும், வில் வித்தையில் 700 புள்ளிகளை கடந்த முதல் இந்திய பாராலிம்பிக் வீராங்கனை என்ற பெருமையை ஷீத்தல் பெற்றுள்ளார்.

இதனையடுத்து ஷீத்தல் தேவி காலிறுதிக்கு முந்தைய சுற்றில் விளையாட உள்ளார்.

மேலும் செய்திகள்