< Back
பிற விளையாட்டு
பிற விளையாட்டு
காஷ்மீரில் முதல்முறையாக சர்வதேச மாரத்தான் போட்டி; 2 ஆயிரம் பேர் பங்கேற்பு
|20 Oct 2024 10:56 AM IST
காஷ்மீரில் முதல்முறையாக சர்வதேச மாரத்தான் போட்டி நடைபெற்றது.
ஸ்ரீநகர்,
ஜம்மு-காஷ்மீரில் முதல் முறையாக சர்வதேச மாரத்தான் போட்டி இன்று நடைபெற்றது. மாரத்தான் போட்டியை முதல்-மந்திரி உமர் அப்துல்லா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த பிரபல தடகள வீரர்கள் உள்பட 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மாரத்தான் போட்டியில் பங்கேற்றனர்.
மாரத்தான் போட்டி 2 பிரிவுகளாக நடைபெற்றது. 21 கிலோமீட்டர் தூரம், 42 கிலோமீட்டர் தூரம் என 2 பிரிவுகளாக போட்டி நடைபெற்றது.
இந்த மாரத்தான் போட்டி துவக்க நிகழ்ச்சியில் காஷ்மீர் முதல்-மந்திரி உமர் அப்துல்லா உடன் பிரபல இந்தி நடிகர் சுனில் ஷெட்டி பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.