உலக தடகள சாம்பியன்ஷிப்பில் சாதிப்பதே அடுத்த இலக்கு: நீரஜ் சோப்ரா
|ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற பிறகு நீரஜ் சோப்ரா நேற்று தாயகம் திரும்பினார் .
புதுடெல்லி ,
பாரீசில் நடந்த ஒலிம்பிக் ஈட்டி எறிதலில் இந்திய நட்சத்திர வீரர் நீரஜ் சோப்ரா 89.45 மீட்டர் தூரம் எறிந்து வெள்ளிப்பதக்கத்தை வென்றார். தொடர்ந்து பெல்ஜியம் தலைநகர் பிரஸ்சல்சில் நடந்த டைமண்ட் லீக் இறுதிசுற்றில் கலந்து கொண்டு 2-வது இடத்தை பிடித்தார்.
இந்த நிலையில் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற பிறகு நேற்று தாயகம் திரும்பிய நீரஜ் சோப்ரா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் . அவர் கூறியதாவதுகூறுகையில்,
.அடுத்த ஆண்டு செப்டம்பரில் டோக்கியோவில் நடைபெறும் உலக தடகள சாம்பியன்ஷிப்பில் சாதிப்பது தான் எனது மிகப்பெரிய இலக்கு. அதற்கு தயாராக இப்போதே பயிற்சியை தொடங்குவேன். ஒலிம்பிக் போட்டி எப்போதும் என் மனதில் இருக்கும் என்றாலும், அடுத்த ஒலிம்பிக்குக்கு 4 ஆண்டுகள் உள்ளன. ஈட்டி எறிதலில் சில தொழில்நுட்ப சிக்கல் உள்ளது. அதை மேம்படுத்த முயற்சித்து வருகிறேன். இந்தியாவில் பயிற்சி பெற எனக்கு பிடிக்கும். என்றார்.