< Back
பிற விளையாட்டு
தேசிய சப்-ஜூனியர் பேட்மிண்டன் போட்டி - அன்புமணி ராமதாஸ் தொடங்கி வைத்தார்
பிற விளையாட்டு

தேசிய சப்-ஜூனியர் பேட்மிண்டன் போட்டி - அன்புமணி ராமதாஸ் தொடங்கி வைத்தார்

தினத்தந்தி
|
21 Oct 2024 5:17 AM IST

தொடக்க விழாவில் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு பேட்மிண்டன் விளையாடி போட்டியை தொடங்கி வைத்தார்.

சென்னை,

36-வது தேசிய சப்-ஜூனியர் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி (15 மற்றும் 17 வயதுக்குட்பட்டோர்) சென்னையை அடுத்த மேலக்கோட்டையூரில் உள்ள தமிழ்நாடு உடற்கல்வி பல்கலைக்கழக அரங்கத்தில் நேற்று தொடங்கியது. இதன் தொடக்க விழாவில் தமிழ்நாடு பேட்மிண்டன் சங்க தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு பேட்மிண்டன் விளையாடி போட்டியை தொடங்கி வைத்தார்.

வருகிற 25-ந்தேதி வரை நடக்கும் இந்த போட்டியில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, மராட்டியம் டெல்லி, அரியானா, ராஜஸ்தான் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் இருந்து 600-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

மேலும் செய்திகள்