< Back
பிற விளையாட்டு
தேசிய சீனியர் பேட்மிண்டன்: பெண்கள் இரட்டையர் பிரிவில் ஆரத்தி-வர்ஷினி இணை சாம்பியன்

கோப்புப்படம்

பிற விளையாட்டு

தேசிய சீனியர் பேட்மிண்டன்: பெண்கள் இரட்டையர் பிரிவில் ஆரத்தி-வர்ஷினி இணை சாம்பியன்

தினத்தந்தி
|
25 Dec 2024 7:31 AM IST

86-வது தேசிய சீனியர் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி பெங்களூருவில் நடந்தது.

பெங்களூரு,

86-வது தேசிய சீனியர் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி பெங்களூருவில் நடந்தது. இதன் பெண்கள் இரட்டையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில் ஆரத்தி சாரா சுனில் (கேரளா)- வர்ஷினி (தமிழ்நாடு) இணை பிரியா-ஸ்ருதி மிஷ்ரா(உத்தரபிரதேசம்) இணையை எதிர்கொண்டது.

இந்த ஆட்டத்தில் அபாரமாக செயல்பட்ட ஆரத்தி-வர்ஷினி இணை 21-18, 20-22, 21-17 என்ற செட் கணக்கில் பிரியா-ஸ்ருதி மிஷ்ரா இணையை வீழ்த்தி கோப்பையை வென்றது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ரகுவும் (கர்நாடகா), பெண்கள் ஒற்றையர் பிரிவில் தேவிகா சிஹாக்கும் (அரியானா) சாம்பியன் பட்டத்தை வென்றனர்.

மேலும் செய்திகள்