பிற விளையாட்டு
மலேசிய ஓபன் பேட்மிண்டன்: மாளவிகா பன்சோத் 2வது சுற்றுக்கு முன்னேற்றம்
பிற விளையாட்டு

மலேசிய ஓபன் பேட்மிண்டன்: மாளவிகா பன்சோத் 2வது சுற்றுக்கு முன்னேற்றம்

தினத்தந்தி
|
8 Jan 2025 8:29 PM IST

மலேசியாவின் கோலாலம்பூர் நகரில் மலேசிய ஓபன் பேட்மிண்டன் போட்டி தொடர் நடந்து வருகிறது.

கோலாலம்பூர்,

மலேசியாவின் கோலாலம்பூர் நகரில் மலேசிய ஓபன் 2025 பேட்மிண்டன் போட்டி தொடர் நடந்து வருகிறது. இந்த தொடரில் பல முன்னணி வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர். இந்நிலையில், இந்த தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் மாளவிகா பன்சோத், மலேசியாவின் கோ ஜின் வெய் உடன் மோதினார்.

இந்த போட்டியில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய மாளவிகா பன்சோத் 21-15, 21-16 என்ற செட் கணக்கில் கோ ஜின் வெய்யை வீழ்த்தி 2வது சுற்றுக்கு முன்னேறினார். இதே பிரிவில் இன்று நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் இந்தியாவின் ஆகர்ஷி காஷ்யப், டென்மார்க்கின் ஜூலி டவால் ஜாகோப்சன் உடன் மோதினார்.

இதில் 14-21, 12-21 என்ற செட் கணக்கில் டென்மார்க்கின் ஜூலி டவால் ஜாகோப்சனிடம் தோல்வி கண்ட ஆகர்ஷி காஷ்யப் தொடரில் இருந்து வெளியேறினார்.

மேலும் செய்திகள்