< Back
பிற விளையாட்டு
மலேசிய ஓபன் பேட்மிண்டன்: திரிஷா ஜாலி - காயத்ரி இணை தோல்வி
பிற விளையாட்டு

மலேசிய ஓபன் பேட்மிண்டன்: திரிஷா ஜாலி - காயத்ரி இணை தோல்வி

தினத்தந்தி
|
9 Jan 2025 2:02 PM IST

திரிஷா ஜாலி - காயத்ரி கோபிசந்த் இணை தொடரிலிருந்து வெளியேறியது.

கோலாலம்பூர்,

மலேசிய ஓபன் பேட்மிண்டன் போட்டி கோலாலம்பூரில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பலர் கலந்து கொண்டு உள்ளனர். இந்நிலையில், இந்த தொடரின் பெண்கள் இரட்டையர் பிரிவில் இன்று நடைபெற்ற 2வது சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் திரிஷா ஜாலி - காயத்ரி கோபிசந்த் இணை, சீனாவின் ஜாங் ஷுசியான் - ஜியா யிபான் இணையை எதிர்கொண்டது .

பரபரப்பான இந்த ஆட்டத்தில் 15-21, 21-18,21-19 என்ற செட் கணக்கில் சீன இணை வெற்றி பெற்றது . இதனால் திரிஷா ஜாலி - காயத்ரி கோபிசந்த் இணை தொடரிலிருந்து வெளியேறியது.

மேலும் செய்திகள்