< Back
பிற விளையாட்டு
ஜப்பான் பேட்மிண்டன்: முதல் சுற்றில் அதிர்ச்சி தோல்வி கண்ட இந்திய ஜோடி

கோப்புப்படம்

பிற விளையாட்டு

ஜப்பான் பேட்மிண்டன்: முதல் சுற்றில் அதிர்ச்சி தோல்வி கண்ட இந்திய ஜோடி

தினத்தந்தி
|
13 Nov 2024 1:56 AM IST

குமாமோட்டோ மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி ஜப்பானில் நடைபெற்று வருகிறது.

குமாமோட்டோ,

குமாமோட்டோ மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி ஜப்பானில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா தரப்பில் பி.வி.சிந்து, லக்ஷயா சென் உள்ளிட்ட முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

தொடக்க நாளான இன்று நடைபெற்ற பெண்கள் இரட்டையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் திரிஷா ஜாலி- காயத்ரி கோபிசந்த் ஜோடி, சீன தைபேயியின் ஹூயின் ஹூய்-லின் ஜிக் யுன் உடன் மோதியது.

இந்த ஆட்டத்தில் இந்திய ஜோடி 16-21, 16-21 என்ற நேர்செட்டில் அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறியது.

மேலும் செய்திகள்