< Back
பிற விளையாட்டு
ஜப்பான் பேட்மிண்டன் இன்று தொடக்கம்
பிற விளையாட்டு

ஜப்பான் பேட்மிண்டன் இன்று தொடக்கம்

தினத்தந்தி
|
12 Nov 2024 6:44 AM IST

பி.வி.சிந்து, இளம் வீரர் லக்‌ஷயா சென் உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள்.

குமாமோட்டோ,

குமாமோட்டோ மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி ஜப்பானில் இன்று தொடங்கி 17-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, இந்திய இளம் வீரர் லக்ஷயா சென் உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள்.

பி.வி.சிந்து முதல் சுற்று ஆட்டத்தில் தாய்லாந்தின் பூசனன் ஒங்பாம்ருங்பானை சந்திக்கிறார். ஆண்கள் ஒற்றையர் பிரிவில் லக்ஷயா சென், மலேசியாவின் லியோங் ஜன் ஹாவுடன் சவாலை தொடங்குகிறார். .

மேலும் செய்திகள்