பிற விளையாட்டு
ஜப்பான் பேட்மிண்டன்: தோல்வி கண்டு வெளியேறிய பி.வி.சிந்து

Image Coutest: AFP

பிற விளையாட்டு

ஜப்பான் பேட்மிண்டன்: தோல்வி கண்டு வெளியேறிய பி.வி.சிந்து

தினத்தந்தி
|
15 Nov 2024 6:31 AM IST

குமாமோட்டோ மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி ஜப்பானில் நடந்து வருகிறது.

குமாமோட்டோ,

குமாமோட்டோ மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி ஜப்பானில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னாள் உலக சாம்பியனான இந்தியாவின் பி.வி.சிந்து, தரவரிசையில் 23-வது இடத்தில் இருக்கும் கனடா வீராங்கனை மிட்செல் லீயை எதிர்கொண்டார். முதல் இரு செட்டை இருவரும் தலா ஒன்று வீதம் கைப்பற்றிய நிலையில் 3-வது செட்டில் அனல் பறந்தது.

இதில் அபாரமாக ஆடிய மிட்செல் லீ 21-17 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றார். இறுதியில் இந்த ஆட்டத்தில் 17-21, 21-16, 21-17 என்ற செட் கணக்கில் பி.வி.சிந்துவை வீழ்த்தி மிட்செல் லீ வெற்றி பெற்றார். பி.வி.சிந்து தோல்வி கண்டதன் மூலம் இந்த போட்டியில் இந்தியாவின் சவால் முடிவுக்கு வந்தது.

மேலும் செய்திகள்