< Back
பிற விளையாட்டு
பிற விளையாட்டு
ஜப்பான் பேட்மிண்டன்: பி.வி.சிந்து அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்
|14 Nov 2024 7:01 AM IST
தொடக்கம் முதல் பி.வி.சிந்து சிறப்பாக விளையாடினார்.
குமாமோட்டோ,
குமாமோட்டோ மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி ஜப்பானில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, பூசனன் ஒங்பாம்ருங்பானை (தாய்லாந்து) எதிர்கொண்டார்.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதல் சிறப்பாக விளையாடிய பி.வி.சிந்து 21-12, 21-8 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
ஆண்கள் ஒற்றையர் முதல் சுற்றில் இந்திய வீரர் லக்ஷயா சென், மலேசியாவின் லியோங் ஜங் ஹாவை சந்தித்தார். இதில் லக்ஷயா சென் 22-20, 17-21, 16-21 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்து தொடரிலிருந்து வெளியேறினார்