< Back
பிற விளையாட்டு
இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன்: இந்திய வீரர் லக்ஷயா சென் கால்இறுதிக்கு முன்னேற்றம்

லக்‌ஷயா சென் (image courtesy: BAI Media via ANI)

பிற விளையாட்டு

இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன்: இந்திய வீரர் லக்ஷயா சென் கால்இறுதிக்கு முன்னேற்றம்

தினத்தந்தி
|
6 Jun 2024 9:02 PM IST

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற இரண்டாவது சுற்று ஆட்டத்தில் லக்ஷயா சென், ஜப்பான் வீரர் கென்டா நிஷிமோடோவுடன் மோதினார்.

ஜகர்த்தா,

இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன் போட்டி தலைநகர் ஜகர்த்தாவில் நடைபெற்று வருகிறது. மொத்தம் ரூ.10¾ கோடி பரிசுத்தொகைக்கான இந்த போட்டியில் முன்னணி வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர். இந்த நிலையில் இந்த போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற இரண்டாவது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் லக்ஷயா சென், ஜப்பான் வீரர் கென்டா நிஷிமோடோவுடன் மோதினார்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் லக்ஷயா சென் 21-9, 21-15 என்ற செட் கணக்கில் நிஷிமோடோவை வீழ்த்தி கால்இறுதிக்கு தகுதி பெற்றார். நாளை நடைபெறும் கால்இறுதி ஆட்டத்தில் லக்ஷயா சென், டென்மார்க் வீரர் ஆண்டர்ஸ் ஆண்டன்சனை சந்திக்கிறார்.

மேலும் செய்திகள்