< Back
பிற விளையாட்டு
ஹைலோ ஓபன் பேட்மிண்டன்: இந்திய வீராங்கனை : இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்
பிற விளையாட்டு

ஹைலோ ஓபன் பேட்மிண்டன்: இந்திய வீராங்கனை : இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

தினத்தந்தி
|
3 Nov 2024 4:33 PM IST

இந்தியாவின் மாளவிகா பன்சோத், டென்மார்க் வீராங்கனை ஜூலி டாவல் உடன் மோதினர்.

பெர்லின்,

ஜெர்மனியில் ஹைலோ ஓபன் சூப்பர் 300 பேட்மிண்டன் தொடர் நடந்து வருகிறது.இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் மாளவிகா பன்சோத், டென்மார்க் வீராங்கனை ஜூலி டாவல் உடன் மோதினர்.

இதில் சிறப்பாக விளையாடிய மாளவிகா 23-21, 21-18 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் மாளவிகா மற்றொரு டென்மார்க் வீராங்கனையை எதிர்கொள்கிறார்.

நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் ஆயுஷ் ஷெட்டி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.


மேலும் செய்திகள்