< Back
பிற விளையாட்டு
பிற விளையாட்டு
டைமண்ட் லீக் இறுதி சுற்று: வெள்ளிப்பதக்கம் வென்றார் நீரஜ் சோப்ரா
|15 Sept 2024 2:18 AM IST
6 சுற்றுகளின் முடிவில் நீரஜ் சோப்ரா 2வது இடம் பிடித்து வெள்ளிப்பதக்கம் வென்றார்
பிரஸ்சல்ஸ்,
முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் டயமண்ட் லீக் தடகள சாம்பியன்ஷிப் போட்டி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. உலகம் முழுவதும் 14 சுற்றாக நடத்தப்பட்ட இந்த லீக்கின் இறுதிச்சுற்று பெல்ஜியம் தலைநகர் பிரஸ்சல்சில் நடந்தது. இறுதிச்சுற்றுக்கு 2 இந்திய வீரர்கள் தகுதி பெற்றனர்.நேற்று நடந்த இறுதிச்சுற்று போட்டியில் இந்தியாவின் அவினாஷ் சாப்லே 9வது இடம் பிடித்தார்.
இந்நிலையில், ஈட்டி எறிதலில் பாரீஸ் ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய வீரர் நீரஜ் சோப்ரா களம் இறங்கினார். மொத்தம் 6 சுற்றுகளின் முடிவில் நீரஜ் சோப்ரா 2வது இடம் பிடித்து வெள்ளிப்பதக்கம் வென்றார். அதிகபட்சமாக 3வது சுற்றில் 87.86 மீட்டர் எறிந்தார்.
87.87 மீட்டர் எறிந்த கிரனடாவின் ஆண்டர்சன் பீட்டர்ஸ் முதல் இடம் பிடித்து தங்கம் வென்றார்.