< Back
பிற விளையாட்டு
டென்மார்க் ஓபன் பேட்மிண்டன்; பி.வி.சிந்து 2வது சுற்றுக்கு முன்னேற்றம்

கோப்புப்படம்

பிற விளையாட்டு

டென்மார்க் ஓபன் பேட்மிண்டன்; பி.வி.சிந்து 2வது சுற்றுக்கு முன்னேற்றம்

தினத்தந்தி
|
15 Oct 2024 8:10 PM IST

டென்மார்க் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி அங்குள்ள ஒடென்ஸ் நகரில் நடந்து வருகிறது.

ஒடென்ஸ்,

டென்மார்க் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி அங்குள்ள ஒடென்ஸ் நகரில் நடந்து வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டம் (ரவுண்ட் ஆப் 32) ஒன்றில் இந்தியாவின் பி.வி.சிந்து, சீன தைபேயின் பை யு-போ உடன் மோதினார்.

இந்த போட்டியில் தொடக்கம் முதலே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய பி.வி.சிந்து முதல் செட்டை 21-8 என்ற புள்ளிக்கணக்கில் கைப்பற்றினார். தொடர்ந்து நடைபெற்ற 2வது செட்டில் பி.வி.சிந்து 13-7 என்ற புள்ளிக்கணக்கில் முன்னிலையில் இருந்தார்.

அப்போது பை யு-போ முழங்காலில் காயம் ஏற்பட்டதை அடுத்து அவர் போட்டியில் இருந்து வெளியேறினார். இதன் காரணமாக பி.வி.சிந்து 2வது சுற்றுக்கு முன்னேறினார். பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற முதல் சுற்றின் மற்ற ஆட்டங்களில் இந்தியாவின் மாளவிகா பன்சோட், ஆகர்ஷி காஷ்யப் ஆகியோர் தோல்வி கண்டு தொடரில் இருந்து வெளியேறினர்.

மேலும் செய்திகள்