பிற விளையாட்டு
சீனா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டி இன்று தொடக்கம்

கோப்புப்படம்

பிற விளையாட்டு

சீனா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டி இன்று தொடக்கம்

தினத்தந்தி
|
19 Nov 2024 7:16 AM IST

சீனா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி ஷென்ஜென் நகரில் இன்று தொடங்குகிறது.

ஷென்ஜென்,

பல முன்னணி வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொள்ளும் சீனா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி ஷென்ஜென் நகரில் இன்று தொடங்குகிறது. இதில் ஒலிம்பிக் சாம்பியன் விக்டர் ஆக்சல்சென் (டென்மார்க்), உலக சாம்பியன் குன்லாவுத் விதித்சரண் (தாய்லாந்து), 'நம்பர் ஒன்' வீராங்கனையும், ஒலிம்பிக் சாம்பியனுமான அன் சே யங் (தென்கொரியா), முன்னாள் உலக சாம்பியன்கள் பி.வி.சிந்து (இந்தியா), அகானே யமாகுச்சி (ஜப்பான்) உள்பட முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.

24-ந் தேதி நடைபெறும் இந்த போட்டியில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் முன்னாள் நம்பர் ஒன் இணையான இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி-சிராக் ஷெட்டி களம் இறங்குகிறது. கடந்த ஆகஸ்டு மாதம் நடந்த பாரீஸ் ஒலிம்பிக்கில் ஏமாற்றம் அளித்த இந்த ஜோடி பல போட்டிகளை தவற விட்ட பிறகு முதல் முறையாக கால் பதிக்கிறது. தோள்பட்டை காயத்தில் இருந்து சாத்விக் குணமடைந்ததையடுத்து மீண்டும் சாதிக்கும் முனைப்புடன் களம் திரும்புகின்றனர். அவர்கள் தங்களது முதல் போட்டியில் சீன தைபேயின் யாங் போ ஹூன்-லீ ஜி ஹூய் இணையுடன் மோத உள்ளனர்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் இந்திய வீரர் லக்ஷயா சென், மலேசியாவின் லீ ஸி ஜியாவை சந்திக்கிறார். இந்திய வீராங்கனையான பி.வி.சிந்து பெண்கள் ஒற்றையர் பிரிவில் தனது முதலாவது ஆட்டத்தில் தாய்லாந்தின் புசனனுடன் மோதுகிறார். மற்ற இந்திய வீராங்கனைகள் ஆகர்ஷி காஷ்யப், டோமோகா மியாஜகியுடனும் (ஜப்பான்), மாளவிகா பன்சோத், லின் ஹோஜ்மார்க்குடனும் (டென்மார்க்) மோதுகிறார்கள்.

மேலும் செய்திகள்