< Back
பிற விளையாட்டு
பிற விளையாட்டு
சீனா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: சாத்விக் - சிராக் ஜோடி அரையிறுதிக்கு முன்னேற்றம்
|22 Nov 2024 7:42 PM IST
சாத்விக்- சிராக் ஜோடி, டென்மார்க் ஜோடியுடன் மோதியது.
ஷென்ஜென்,
சீனா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி ஷென்ஜென் நகரில் நடந்து வருகிறது. இதில் பல முன்னணி வீரர் வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இதில் இன்று நடைபெற்ற ஆண்கள் இரட்டையர் பிரிவு காலிறுதி சுற்றில் இந்தியாவின் சாத்விக்- சிராக் ஜோடி, டென்மார்க்கின் ஆண்டர்ஸ் ஸ்காரப் மற்றும் கிம் அஸ்ட்ரூப் ஜோடியுடன் மோதியது.
தொடக்கம் முதல் சிறப்பாக விளையாடிய சாத்விக் - சிராக் ஜோடி 21-16, 21-19 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.