< Back
பிற விளையாட்டு
பிற விளையாட்டு
சீனா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: லக்சயா சென் காலிறுதிக்கு முன்னேற்றம்
|22 Nov 2024 12:57 AM IST
நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய வீரர் லக்சயா சென் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.
ஷென்ஜென்,
சீனா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி ஷென்ஜென் நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற 2-வது சுற்று ஆட்டத்தில் இந்திய வீரர் லக்சயா சென், டென்மார்க்கின் ராஸ்முஸ் ஜெம்கியுடன் மோதினார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் லக்சயா சென் 21-16, 21-18 என்ற நேர்செட்டில் ராஸ்முஸ் ஜெம்கியை வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தார்.
மற்ற ஆட்டங்களில் இந்திய வீராங்கனைகள் அனுபமா உபாத்யாயா 7-21, 14-21 என்ற நேர்செட்டில் ஜப்பானின் நட்சுகி நிடாரியாவிடமும், மாள்விகா பன்சோத் 9-21, 9-21 என்ற நேர்செட்டில் தாய்லாந்தின் சுபனிதா கேத்தோங்கிடமும் தோற்று வெளியேறினர்.