< Back
பிற விளையாட்டு
சீனா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: 2-வது சுற்று ஆட்டத்தில் மாளவிகா பன்சோத் தோல்வி
பிற விளையாட்டு

சீனா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: 2-வது சுற்று ஆட்டத்தில் மாளவிகா பன்சோத் தோல்வி

தினத்தந்தி
|
22 Nov 2024 6:18 PM IST

2-வது சுற்று ஆட்டத்தில் இந்திய வீராங்கனை மாளவிகா பன்சோத், தாய்லாந்து வீராங்கனை சுபநிதா உடன் மோதினார்

ஷென்ஜென்,

சீனா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி ஷென்ஜென் நகரில் நடந்து வருகிறது. இதில் பல முன்னணி வீரர் வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர் . இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த 2-வது சுற்று ஆட்டத்தில் இந்திய வீராங்கனை மாளவிகா பன்சோத், தாய்லாந்து வீராங்கனை சுபநிதா உடன் மோதினார்

பரபரப்பான இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடி சுபநிதா 21- 9, 21-9 என்ற கணக்கில் வெற்றி பெற்றார் தோல்வியடைந்த மாளவிகா பன்சோத் தொடரில் இருந்து வெளியேறினார்.

மேலும் செய்திகள்