< Back
பிற விளையாட்டு
சீனா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: முதல் சுற்றில் பி.வி. சிந்து, லக்சயா சென் வெற்றி

கோப்புப்படம் 

பிற விளையாட்டு

சீனா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: முதல் சுற்றில் பி.வி. சிந்து, லக்சயா சென் வெற்றி

தினத்தந்தி
|
21 Nov 2024 2:31 AM IST

நேற்று நடந்த ஆட்டத்தில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, தாய்லாந்தின் பூசனன் ஓங்பாம்ருங்பானுடன் மோதினார்.

ஷென்ஜென்,

சீனா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி ஷென்ஜென் நகரில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, தாய்லாந்தின் பூசனன் ஓங்பாம்ருங்பானுடன் மோதினார். இந்த ஆட்டத்தில் பி.வி. சிந்து 21-17, 21-19 என்ற நேர் செட்டில் பூசனன் ஓங்பாம்ருங்பானை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

இதேபோல் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் லக்சயா சென், பாரீஸ் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்றவரான மலேசியாவின் லீ ஸி ஜியாவுடன் மோதினார். இந்த ஆட்டத்தில் லக்சயா சென் 21-14, 13-21, 21-13 என்ற செட் கணக்கில் லீ ஸி ஜியாவை வீழ்த்தி 2-வது சுற்றுக்குள் நுழைந்தார். மாள்விகா பன்சோத், சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி- சிராக் ஷெட்டி ஜோடி, திரிஷா ஜாலி- காயத்ரி கோபிசந்த் ஜோடி ஆகிய இந்தியர்களும் வெற்றி கண்டனர்.

மேலும் செய்திகள்