< Back
பிற விளையாட்டு
உலக செஸ் சாம்பியன்ஷிப்: 3வது சுற்றில் குகேஷ் வெற்றி
பிற விளையாட்டு

உலக செஸ் சாம்பியன்ஷிப்: 3வது சுற்றில் குகேஷ் வெற்றி

தினத்தந்தி
|
27 Nov 2024 9:32 PM IST

உலக செஸ் சாம்பியன்ஷிப்பின் 3வது சுற்றில் இந்திய வீரர் குகேஷ் வெற்றிபெற்றுள்ளார்.

சிங்கப்பூர்,

இந்திய கிராண்ட்மாஸ்டர் குகேஷ், நடப்பு சாம்பியன் சீனாவின் டிங் லிரென் இடையேயான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடைபெற்று வருகிறது. 14 சுற்றுகளை கொண்ட இப்போட்டியில் வெற்றிக்கு ஒரு புள்ளியும், டிராவுக்கு அரை புள்ளியும் வழங்கப்படும். முதலில் 7½ புள்ளிகளை எட்டும் வீரர் உலக சாம்பியன் பட்டத்தை வெல்வார்.

அதன்படி, இரு வீரர்களுக்கும் இடையேயான முதல் சுற்றில் சீன வீரர் டிங் லிரென் வெற்றிபெற்றார். இரண்டாவது சுற்று டிராவில் முடிந்தது. இதன் மூலம் சீன வீரர் டிங் லிரென் 1½ புள்ளிகளுடனும் முன்னிலையில் இருந்தார். குகேஷ் ½ புள்ளிகளுடனும் பின் தங்கி இருந்தார்.

இந்நிலையில், இரு வீரர்களுக்கும் இடையேயான 3வது சுற்று இன்று நடைபெற்றது. இதில், வெள்ளை நிற காய்களுடன் இந்திய வீரர் குகேஷ் களமிறங்கினார். ஆட்டத்தின் ஆரம்பம் முதலே குகேஷ் ஆதிக்கம் செலுத்தினார்.

ஆட்டத்தின் 37வது நகர்வின்போது சீன வீரர் டிங் லிரெனை வீழ்த்தி குகேஷ் வெற்றிபெற்றார். இந்த வெற்றியின் மூலம் குகேசுக்கு 1 புள்ளி வழங்கப்பட்டது.

இதன் மூலம் 3 சுற்றுகள் முடிவில் குகேஷ் மற்றும் டிங் லிரென் என இரு வீரர்களும் தலா 1½ புள்ளிகளுடன் சமநிலையில் உள்ளனர். இரு வீரர்களுக்கும் இடையேயான 4வது சுற்று வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது.

மேலும் செய்திகள்