< Back
பிற விளையாட்டு

image courtesy: twitter/@FIDE_chess
பிற விளையாட்டு
செஸ் ஒலிம்பியாட்: வரலாற்றில் முதல் முறை... தங்கம் வென்று இந்திய ஆண்கள் அணி சாதனை

22 Sept 2024 6:38 PM IST
செஸ் ஒலிம்பியாட் தொடரில் இந்திய ஆண்கள் அணி தங்கப்பதக்கம் வென்றுள்ளது.
புடாபெஸ்ட்,
45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெற்ற இறுதி சுற்றில் இந்திய ஆண்கள் அணி ஸ்லோவோனியாவை எதிர்கொண்டது.
இதில் இந்தியா தரப்பில் குகேஷ் மற்றும் அர்ஜூன் ஆகியோர் வெற்றி பெற்றனர். இதன் மூலம் இந்திய ஆண்கள் அணி செஸ் ஒலிம்பியாட் வரலாற்றில் முதல் முறையாக தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளது.
ஸ்ரீநாத் நாராயணன், குகேஷ்,பிரக்ஞானந்தா, அர்ஜூன் எரிகைசி, விதித் மற்றும் பெண்டாலா ஆகியோர் அடங்கிய இந்திய ஆண்கள் அணி தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளது.