< Back
பிற விளையாட்டு
சென்னை கிராண்ட்மாஸ்டர்ஸ் செஸ்: முதல் சுற்றில் அர்ஜூன் எரிகைசி போராடி வெற்றி

கோப்புப்படம் 

பிற விளையாட்டு

சென்னை கிராண்ட்மாஸ்டர்ஸ் செஸ்: முதல் சுற்றில் அர்ஜூன் எரிகைசி போராடி வெற்றி

தினத்தந்தி
|
6 Nov 2024 9:53 PM IST

முதலாவது சுற்றில் இந்தியாவின் அர்ஜூன் எரிகைசி, சக நாட்டவரான விதித் குஜராத்தியுடன் மோதினார்.

சென்னை,

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மொத்தம் ரூ.70 லட்சம் பரிசுத்தொகைக்கான சென்னை கிராண்ட்மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நேற்று தொடங்கியது. 7 சுற்று கொண்ட இந்த போட்டியில் மாஸ்டர்ஸ் பிரிவில் 8 சர்வதேச வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

இதன் முதலாவது சுற்றில் உலக தரவரிசையில் 4-வது இடம் வகிக்கும் இந்தியாவின் அர்ஜூன் எரிகைசி, சக நாட்டவரான விதித் குஜராத்தியுடன் மல்லுக்கட்டினார். கருப்புநிற காய்களுடன் ஆடிய எரிகைசி 5 மணி நேர போராட்டத்துக்கு பிறகு 96-வது நகர்த்தலில் குஜராத்தியை வீழ்த்தினார். தனது எலோரேட்டிங் புள்ளி 2,800-ஐ கடந்து வரலாறு படைத்த எரிகைசி அதன் பிறகு இந்தியாவில் கலந்து கொண்ட முதல் போட்டி இதுவாகும்.

மேலும் செய்திகள்