< Back
பிற விளையாட்டு
பிற விளையாட்டு
சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ்: மாஸ்டர்ஸ் பிரிவில் அரவிந்த் சிதம்பரம் சாம்பியன்
|11 Nov 2024 7:00 PM IST
சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியில் சேலஞ்சர்ஸ் பிரிவில் பிரணவ் வெங்கடேஷ் சாம்பியன் பட்டம் வென்றார்.
சென்னை,
சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் 2வது சீசன் கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் மாஸ்டர்ஸ் பிரிவின் இறுதிப்போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த அரவிந்த் சிதம்பரம், அமெரிக்காவின் லெவோன் அரோனியனை வீழ்த்தி சாம்பியன் ஆனார். கடும் போட்டிக்கு இடையே அரவிந்த் சிதம்பரம் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.
டைபிரேக்கர் முறையில் நடைபெற்ற போட்டியில் 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் ஆனார். இதேபோல், சேலஞ்சர்ஸ் பிரிவில் பிரணவ் வெங்கடேஷ் சாம்பியன் பட்டம் வென்றார். அரவிந்த் சிதம்பரத்துக்கு பரிசுத் தொகையாக ரூ.15 லட்சமும், பிரணவுக்கு பரிசுத் தொகையாக ரூ.6 லட்சமும் வழங்கப்படுகிறது.