< Back
பிற விளையாட்டு
பிற விளையாட்டு
உலக பிளிட்ஸ் செஸ் - சாம்பியன் பட்டத்தை பகிர்ந்து கொண்ட கார்ல்சென் - நெபோம்னியச்சி
|1 Jan 2025 5:49 PM IST
3.5 புள்ளிகள் பெற்றிருந்த நிலையில் சமனில் முடித்து சாம்பியன் பட்டத்தை பகிர்ந்துகொள்ள ஒப்புக்கொண்டனர்
நியூயார்க்,
நியூயார்க்கில் உலக பிளிட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்றது. இந்த தொடரில் இறுதிச்சுற்றில் நார்வேயின் கார்ல்சென் , ரஷியாவின் இயன் நெபோம்னியச்சி ஆகியோர் மோதினர் . இந்த ஆட்டத்தில் இருவரும் சிறப்பாக செயல்பட்டனர் .
இருவரும் 3.5 புள்ளிகள் பெற்றிருந்த நிலையில் சமனில் முடித்து சாம்பியன் பட்டத்தை பகிர்ந்துகொள்ள ஒப்புக்கொண்டனர். வரலாற்றில் முதல்முறையாக இருவர் சிங்கிள் சாம்பியன் பட்டத்தை பகிர்ந்து கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.