< Back
பிற விளையாட்டு
குத்து சண்டை போட்டி; மைக் டைசனை வீழ்த்தினார் ஜேக் பால்

Image Courtesy: AFP

பிற விளையாட்டு

குத்து சண்டை போட்டி; மைக் டைசனை வீழ்த்தினார் ஜேக் பால்

தினத்தந்தி
|
16 Nov 2024 11:52 AM IST

8 சுற்றுகளாக நடைபெற்ற இந்த போட்டியில் மைக் டைசனை வீழ்த்தி ஜேக் பால் வெற்றி பெற்றார்.

டெக்ஸாஸ்,

அமெரிக்காவில் 1980-ம் ஆண்டின் பிற்பகுதியில் பிரபல குத்து சண்டை வீரராக இருந்தவர் மைக் டைசன் (வயது 58). 1987-ம் ஆண்டு முதல் 1990-ம் ஆண்டு வரை உலக ஹெவிவெயிட் சாம்பியனாக வலம் வந்தவர் மைக் டைசன். இவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் ஏராளம் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று.

குத்துச்சண்டை போட்டியில் உலக சாம்பியன் பட்டம் வென்ற டைசன், குத்துச்சண்டையில் எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தவர். 20 வயதில் ஹெவிவெயிட் சாம்பியனாகி, உலக சாதனை படைத்தார். களத்தில் இவரைக் கண்டு அஞ்சாத எதிரிகளே இல்லை. இவரை ரோல் மாடலாக கொண்டு குத்து சண்டையில் இந்திய வீரர்கள் பலர் கலக்கி வருகின்றனர்.

இந்தநிலையில் 20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் குத்துசண்டையில் மைக் டைசன் இன்று களம் இறங்கினார். அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தை சேர்ந்த 27 வயதான குத்துசண்டை வீரர் ஜேக் பாலை எதிர்த்து இன்று போட்டியிட்டார். 8 சுற்றுகளாக நடைபெற்ற இந்த போட்டியில் மைக் டைசனை வீழ்த்தி ஜேக் பால் வெற்றி பெற்றார்.

இந்தப் போட்டியில் ஜேக் பால் 278 முறை மைக் டைசனை தாக்க முயன்றார். அதில் 78 தாக்குதல்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டன. மறுபுறம் மைக் டைசன் 97 முறை மட்டுமே ஜேக் பாலை தாக்க முயன்றார். அதில் 12 தாக்குதல்கள் மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டன.

இரண்டு நடுவர்களில் ஒருவர் 80 - 72 எனவும், மற்றொருவர் 79 - 73 எனவும் ஜேக் பாலுக்கு சாதகமாக புள்ளிகளை வழங்கினார்கள். இந்தப் போட்டியில் மூன்றாவது சுற்றுக்கு பின் மைக் டைசன் ஒவ்வொரு சுற்றிலும் தன்னை தற்காத்துக் கொள்வதில் தான் அதிக நேரத்தை செலவிட்டார். இந்தப் போட்டியில் மைக் டைசன் இளம் வீரரைப் போல ஆடி வெல்வார் என கனவு கண்டு கொண்டு இருந்த ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர்.

மேலும் செய்திகள்