< Back
பிற விளையாட்டு
பிற விளையாட்டு
இந்திய தடகள சம்மேளனத்தின் புதிய தலைவராக பகதூர் சிங் தேர்வு
|8 Jan 2025 8:02 AM IST
பஞ்சாப்பை சேர்ந்த பகதூர் சிங் சாகூ புதிய தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சண்டிகார்,
இந்திய தடகள சம்மேளனத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் சண்டிகாரில் நேற்று தொடங்கியது. 2 நாட்கள் நடைபெறும் இந்த கூட்டத்தில் முதல் நாளில் 2025-2029-ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் தேர்தல் நடந்தது. 2002-ம் ஆண்டு பூசனில் நடந்த ஆசிய விளையாட்டு போட்டியில் குண்டு எறிதலில் தங்கப்பதக்கம் வென்றவரான பஞ்சாப்பை சேர்ந்த 51 வயது பகதூர் சிங் சாகூ புதிய தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அந்த பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்திருந்த முன்னாள் நீளம் தாண்டுதல் வீராங்கனை அஞ்சு பாபி ஜார்ஜ் திடீரென ஒதுங்கியதால் பகதூர் சிங் போட்டியின்றி தேர்வானார்.