< Back
பிற விளையாட்டு
தடகள வீராங்கனை தீபான்ஷி ஊக்க மருந்து சோதனையில் சிக்கினார்
பிற விளையாட்டு

தடகள வீராங்கனை தீபான்ஷி ஊக்க மருந்து சோதனையில் சிக்கினார்

தினத்தந்தி
|
5 July 2024 8:01 AM IST

தீபான்ஷியிடம் தேசிய ஊக்க மருந்து தடுப்பு முகமை எடுத்த சிறு நீர் மாதிரியை பரிசோதனை செய்ததில் அவர் தடை செய்யப்பட்ட ஊக்க மருந்தை பயன்படுத்தி இருப்பது தெரிய வந்தது.

புதுடெல்லி,

மாநிலங்களுக்கு இடையிலான தேசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி அரியானா மாநிலம் பஞ்ச்குலாவில் கடந்த வாரம் நடந்தது. இதில் பெண்களுக்கான 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் அரியானாவை சேர்ந்த 21 வயது வீராங்கனை தீபான்ஷி வெள்ளிப்பதக்கம் வென்றார். இந்த போட்டியின்போது தீபான்ஷியிடம் தேசிய ஊக்க மருந்து தடுப்பு முகமை எடுத்த சிறு நீர் மாதிரியை பரிசோதனை செய்ததில் அவர் தடை செய்யப்பட்ட ஊக்க மருந்தை பயன்படுத்தி இருப்பது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து அவரை இடைநீக்கம் செய்து தேசிய ஊக்க மருந்து தடுப்பு முகமை நடவடிக்கை எடுத்துள்ளது.

மேலும் செய்திகள்